மெட்டுவாவி அங்காளம்மன் கோவிலில் பூப்பறிக்கும் விழா


மெட்டுவாவி  அங்காளம்மன் கோவிலில் பூப்பறிக்கும் விழா
x
தினத்தந்தி 19 Jan 2023 12:15 AM IST (Updated: 19 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மெட்டுவாவி அங்காளம்மன் கோவிலில் பூப்பறிக்கும் விழா

கோயம்புத்தூர்

நெகமம்

நெகமம் அருகே மெட்டுபாவி கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு காணும் பொங்கலை யொட்டி கொங்குநாட்டு பூப்பறிக்கும் விழா நடந்தது. முன்னதாக பெண்கள் தங்களது வீடுகளில் இருந்து கூடைகளில் பொறி, சுண்டல், கடலை, பழங்கள், இனிப்புகள் ஆகியவற்றை தலையில் வைத்துக்கொண்டு ஊர்வலமாக ஊர் எல்லை அருகே உள்ள அங்காளம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்ட பின் கூடையில் கொண்டு வந்தவைகளை பகிர்ந்து உண்டு கூடிப்பேசி மகிழ்ந்தனர்.

இதில், ஊரில் உள்ள இளைஞர்கள், மற்றும் பெண்கள் பாரம்பரிய கலைகளுல் ஒன்றான வள்ளி கும்மி பாட்டு பாடி நடனம் ஆடினர். இறுதியில் பெண்கள் தாங்கள் கொண்டு வந்த கூடைகளில் ஆற்றோரம் உள்ள ஆவாரம்பூக்களை பறித்து எடுத்துச்சென்றனர். இதுவே பூப்பரிக்கும் திருவிழா என கூறப்படுகிறது.


Next Story