கோவையில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி


கோவையில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி
x
தினத்தந்தி 29 May 2023 12:30 AM IST (Updated: 29 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

வரத்து அதிகரிப்பு காரணமாக கோவையில் பூக்கள் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து உள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.300-க்கு விற்பனையானது.

கோயம்புத்தூர்

கோவை

வரத்து அதிகரிப்பு காரணமாக கோவையில் பூக்கள் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து உள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.300-க்கு விற்பனையானது.

பூ மார்க்கெட்

கோவை பூ மார்க்கெட்டுக்கு கோவை, மேட்டுப்பாளையம், ஊட்டி மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

திருவிழா, முகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அமோகமாக இருக்கும். அப்போது பூக்களின் விலையும் அதிகமாக இருக்கும். பூக்களின் வரத்தை பொறுத்து இங்கு காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் பூக்களின் விலை நிர்ணயம் செய்யப்படும்.

இந்தநிலையில் தற்போது கோவை பூமார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் கடந்த 4 நாட்களாக முகூர்த்த நாட்கள் இல்லாததால் பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்து காணப்பட்டது.

மல்லிகைப்பூ கிலோ ரூ.300

அதுவே கடந்த வாரம் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,500 முதல் ரூ.1,800 வரை விற்பனையானது. ஆனால் நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.300-க்கு விற்பனையானது. பூக்களின் விலை குறைந்ததால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

மற்ற பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-

செண்டு மல்லி ரூ.40, முல்லைப் பூ ரூ.100, பட்டன் ரோஸ் ரூ.80, சம்மங்கி ரூ.20, செவ்வந்தி ரூ.60, துளசி ஒரு கட்டு ரூ.101, தாமரைப்பூ ஒன்று 2 ரூபாய் என பூக்கள் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது.

முகூர்த்தம் இல்லை

இது குறித்து பூமார்க்கெட் வியாபாரிகள் கூறும்போது, அஷ்டமி-நவமி என்பதாலும், முகூர்த்தங்கள் போதிய அளவு இல்லாததாலும், பூக்கள் வரத்து அதிகளவு இருப்பதாலும் விலை குறைந்து உள்ளது.

மேலும் கேரளாவிலும் பூக்களின் தேவைகள் இல்லாததால் அங்கு பூக்கள் அனுப்புவதும் குறைந்துள்ளது. இதனால் பூக்களின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து உள்ளது.

வருகிற 1-ந் தேதி முகூர்த்த நாள் வருகிறது. இதனால் அப்போது பூக்களின் தேவை அதிகளவு இருக்கும். இதனால் அப்போது பூக்கள் விலை உயர வாய்ப்பு உள்ளது என்றனா்.


Next Story