பூக்கள் விலை 'கிடுகிடு' உயர்வு


பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
x

ஓசூர் மார்க்ெகட்டில் பூக்கள் விலை 'கிடுகிடு' உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

பூக்கள் விலை உயர்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் சாமந்தி, பட்டன் ரோஸ் உள்ளிட்ட பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகள் பூக்களை அறுவடை செய்து ஓசூரில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இவற்றை வியாபாரிகள் வாங்கி பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

இந்தநிலையில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு ஓசூர் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை 'கிடுகிடு' என உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சாமந்தி ஒரு கிலோ ரூ.20, 30 என விற்கப்பட்டது. பண்டிகை நாள் நெருங்க நெருங்க பூக்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சி

அதன்படி ஓசூர் பூ மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ ரூ.200 முதல் 250 வரை விற்கப்பட்டது. அதே போல் பட்டன் ரோஸ் ஒரு கிலோ ரூ.200 முதல் 260 வரை விற்பனை செய்யப்பட்டது. மல்லிப்பூ கிலோ ரூ.800 முதல் 1,000-க்கும், கனகாம்பரம் ரூ.1,200-க்கும் விற்பனையானது. மேலும், நாளொன்றுக்கு 500 முதல் 600 டன்கள் வரை பூக்கள் விற்பனையாகி வருவதாக பூ வியாபாரிகள் தெரிவித்தனர். பூக்களின் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story