நெல்லையில் பூக்கள் விலை உயர்வு


நெல்லையில் பூக்கள் விலை உயர்வு
x

நெல்லையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

திருநெல்வேலி

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டிற்கு பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று பூக்கள் வாங்க வியாபாரிகளும், பொதுமக்களும் சந்திப்பு பூ மார்க்கெட்டில் குவிந்தனர். இதனால் பூக்கள் விலையும் அதிகரித்து இருந்தது. நேற்று முன்தினம் 1 கிலோ ரூ.700-க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ நேற்று ரூ.300 உயர்ந்து ரூ.1,000-க்கு விற்பனையானது.

இதேபோல் ரூ.500-க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ ரூ.200 உயர்ந்து ரூ.700-க்கு விற்கப்பட்டது. அரளிப்பூ ரூ.300-க்கும், சம்பங்கி ரூ.200-க்கும், ரோஜாப்பூ 1 கட்டு ரூ.150-க்கும், கேந்திப்பூ ரூ.30-க்கும் விற்பனையானது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், 'தற்போது பூக்கள் விளைச்சல் அதிகமாக உள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் இருந்து விற்பனைக்காக அதிக பூக்கள் வந்துள்ளது. எனவே பூக்களின் விலை நேற்று கடுமையாக உயராமல், சிறிதளவே உயர்ந்துள்ளது' என்றனர். இருந்தபோதிலும் தேவை அதிகரித்து இருந்ததால் வியாபாரிகளும், பொதுமக்களும் போட்டி போட்டு பூக்களை வாங்கி சென்றனர்.


Next Story