சேலத்தில் பூக்கள் விலை உயர்வு


சேலத்தில் பூக்கள் விலை உயர்வு
x
சேலம்

வரலட்சுமி நோன்பையொட்டி நேற்று சேலத்தில் பூக்கள் விலை உயர்ந்தது. ஒரு கிலோ மல்லி ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டன.

வரலட்சுமி நோன்பு

வரலட்சுமி நோன்பு இன்று (வெள்ளிக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இதனால் சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை மிக அதிக விலைக்கு விற்கப்பட்டன. நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.500-க்கு விற்கப்பட்ட மல்லிப்பூ நேற்று 300 விலை அதிகரித்து ஒரு கிலோ ரூ.800-க்கு விற்கப்பட்டன.

ரூ.360-க்கு விற்கப்பட்ட முல்லை பூ நேற்று ரூ.500-க்கு விற்கப்பட்டன. ரூ.260-க்கு விற்கப்பட்ட ஜாதிமல்லி ரூ.280-க்கு விற்பனை ஆகின. காக்கட்டான், மலைக்காக்கட்டான் பூக்கள் ஒரு கிலோ ரூ.320-க்கும், கலர் காக்கட்டான் ரூ.280-க்கும் விற்கப்பட்டன. அரளி பூ ரூ.120, வெள்ளை, மஞ்சள், செவ்வரளி பூக்கள் ஒரு கிலோ தலா ரூ.260-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

வரத்து அதிகம்

நந்திவட்டம் ரூ.140-க்கு விற்கப்பட்டன. மஞ்சள் சாமந்தி ரூ.250-க்கும், வெள்ளை சாமந்தி ரூ.300-க்கும் விற்கப்பட்டன. அதன்படி வரலட்சுமி நோன்பையொட்டி நேற்று மார்க்கெட்டில் பூக்கள் வாங்க பெண்கள் கூட்டம் அலைமோதியது.

இதுகுறித்து பூ வியாபாரிகளிடம் கேட்ட போது வரலட்சுமி நோன்பையொட்டி வழக்கத்தை விட பூ வியாபாரம் விறு, விறுப்பாக நன்றாக விற்பனை ஆகின. அந்த அளவிற்கு பூக்கள் வரத்தும் அதிகம் இருந்தது என்றனர்.


Next Story