போக்சோவில் பூ வியாபாரி கைது


போக்சோவில் பூ வியாபாரி கைது
x
தினத்தந்தி 18 Aug 2022 10:58 PM IST (Updated: 18 Aug 2022 11:03 PM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டை அருகே 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூ வியாபாரியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே உள்ள மட்டப்பாறையை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 24). பூ வியாபாரி. இவர், 10-ம் வகுப்பு படிக்கிற 15 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமி தரப்பில், விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாண்டியனை போலீசார் கைது செய்தனர்.

1 More update

Next Story