முனீஸ்வரர் கோவில் பூச்சொரிதல் விழா


முனீஸ்வரர் கோவில் பூச்சொரிதல் விழா
x
தினத்தந்தி 25 July 2023 12:15 AM IST (Updated: 25 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

முனீஸ்வரர் கோவில் பூச்சொரிதல் விழாவில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடி அருகே இலுப்பைக்குடி கிராமத்தில் உள்ள கோட்டைக்கரை முனிஸ்வரர் கோவிலில் 35-வது ஆண்டு பூச்சொரிதல் விழா கடந்த 17-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான பால்குட திருவிழா நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தும், அழகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மேலும் பக்தர்கள் பலரும் பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த விழாவில் இலுப்பைக்குடி காரைக்குடி, அரியக்குடி பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story