டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை


டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை
x

நெல்லையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம். அருகில் மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் மற்றும் பலர் உள்ளனர்.

‘பத்மஸ்ரீ’ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினத்தையொட்டி நெல்லையில் உள்ள அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

திருநெல்வேலி

'பத்மஸ்ரீ' டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 10-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி நெல்லை 'தினத்தந்தி' அலுவலகத்தில் அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. 'தினத்தந்தி' ஊழியர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முரளிராஜா, வக்கீல் அணி மாநில இணை தலைவர் மகேந்திரன், ஓ.பி.சி. அணி மாநில துணைத்தலைவர் காமராஜ், மாவட்ட தலைவர் டியூக்துரைராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் கவி பாண்டியன், சொக்கலிங்ககுமார், மாநகர் மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் குறிச்சி கிருஷ்ணன், மகேந்திரன், மாவட்ட செயலாளர்கள் பைபாஸ் சண்முகவேலன், சின்னப்பாண்டியன், மாவட்ட துணைத்தலைவர் அருள்ராஜ், மாரியப்பன், பிச்சாண்டி, மண்டல தலைவர் கெங்காராஜ், வர்த்தக காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் சேவியர், மாவட்ட தலைவர் ஆபிரகாம் வெஸ்லி, பொதுச்செயலாளர் ஜான் பாபு, மாவட்ட செயலாளர் நெகோமியா, பொருளாளர் பி.வி.டி.ராஜேந்திரன், மருதையா பாண்டியன், கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ் மாநில காங்கிரசார் மாவட்ட துணை தலைவர் டி.பி.எஸ்.சுப்பிரமணியன் தலைமையில் மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தி.மு.க.

தி.மு.க.வினர் நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் கவுன்சிலர்கள் நித்தியபாலையா, சுந்தர், மணி, காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் உமாபதிசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, தி.மு.க. நெல்லை கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல், மானூர் ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாநகர நெசவாளர் அணி செயலாளர் அந்தோணி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுடலைகண்ணு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி, செயற்குழு உறுப்பினர் மாயகிருஷ்ணன், முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அ.தி.மு.க.

அ.தி.மு.க.வினர் நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் அமைப்புச் செயலாளர்கள் ஏ.கே.சீனிவாசன், சுதா பரமசிவம், மாநில கொள்கை பரப்பு துணைச்செயலாளர் பாப்புலர் முத்தையா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.பி.ஆதித்தன், மாவட்ட அவைத்தலைவர் பரணிசங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, முன்னாள் மண்டல தலைவர் தச்சை மாதவன், பகுதி செயலாளர்கள் சிந்துமுருகன், திருத்து சின்னத்துரை, சக்திகுமார், முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம், முன்னாள் அரசு வக்கீல் அங்கப்பன், வக்கீல் ஜெயபாலன், எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் தலைமலை கணேசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குட்டிபாண்டியன், மருதூர் ராமசுப்பிரமணியன், அமைப்பு சாரா ஓட்டுனா் அணி செயலாளர் சிவந்தி மகாராஜன், பொதுக்குழு உறுப்பினர் வசந்தி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் குருசாமி, நிர்வாகிகள் டால்சரவணன், சப்பாணி முத்து, முத்துராஜ், அந்தோணிதாஸ், தங்கபிச்சையா, மாவட்ட பிரதிநிதிகள் தொண்டன் ஆறுமுகம், சரவணன், ராமச்சந்திரன், பகுதி துணைச்செயலாளர்கள் பழனி சுப்பையா, சத்யாமோகன், பொருளாளர் கண்ணன், சண்முகநாதன், மாணவர் அணி நிர்வாகி ஜெய்சன், தச்சை பகுதி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், எம்.ஜி.ஆர்.மன்ற மாநில துணைச்செயலாளர் நாராயணன் பெருமாள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

த.ம.மு.க.-இந்து முன்னணி

இந்து முன்னணியினர் மாநிலச் செயலாளர் வக்கீல் குற்றாலநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மாவட்டச் செயலாளர்கள் சுடலை, ராஜசெல்வம், பேட்டை நகர பொதுச்செயலாளர் குருமகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் மரியாதை செலுத்தினார்கள். மாவட்ட செயலாளர் துரைப்பாண்டியன், மாநகர இளைஞரணி செயலாளர் முத்துப்பாண்டியன், நிர்வாகிகள் செல்வகுமார், கிருஷ்ணன், மதன்குமார், பரமசிவபாண்டியன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிர்வாகிகள் தங்கவேலு, குமார், செண்டு உள்பட பல கலந்துகொண்டனர்.

காமராஜர் சிலை பராமரிப்பு குழு

நெல்லை சந்திப்பு காமராஜர் சிலை பராமரிப்பு குழுவினர் தலைவர் வித்யா கண்ணன் தலைமையில் மரியாதை செலுத்தினார்கள். செயலாளர் சரத்மணி, நிர்வாகிகள் அருள்மணி, ஆரைக்குளம் ரஞ்சித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை நாடார் உறவின்முறை சங்கத்தினர் தலைவர் அசோகன்நாடார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் துணை செயலாளர் மனோகரன், டாக்டர் சார்லஸ் பிரேம்குமார், புல்லட் ராஜா, சாமுவேல், ரமேஷ், முருகன், ஆர்.கே.எஸ்.டேனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தினர் நெல்லை மாநகர தலைவர் பாக்கியராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் தொகுதி செயலாளர் சரத்மணி, தட்சணமாற நாடார் சங்க நிர்வாக குழு உறுப்பினர் நயினார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை வ.உ.சி. மணிமண்டப நூலக வாசகர் வட்ட துணைத்தலைவர் ஜானகிராம் அந்தோணி, பாரதியார் முத்தமிழ் மன்ற நிர்வாகி கணபதி சுப்பிரமணியன், சிவப்பிரகாசர் நற்பணி மன்ற துணைத்தலைவர் முத்துசாமி, வாசுகி வளர் தமிழ் மன்ற தலைவர் உக்கிரன்கோட்டை மணி, நெல்லை மீனாட்சிபுரம் கிளை நூலகர் அகிலன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதேபோல் பல்வேறு இலக்கிய அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.


Next Story