உடுமலை பகுதியில் பூக்களின் விலை கிடு கிடு உயர்வு
உடுமலை பகுதியில் பூக்களின் விலை கிடு கிடு உயர்வு
தளி
இன்று சரஸ்வதி பூஜையும் நாளை ஆயுத பூஜையும் நடக்கிறது.இதற்காக மலர்கள், வாழைமரம், பொரி, பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கும் பணியில் உடுமலை பகுதி பொதுமக்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக மல்லிகை ரூ. 1,800, செவ்வந்தி ரூ. 1000, பட்டன் ரோஸ் ரூ.800 முதல் ரூ. 1000, முல்லை ரூ. 900 என பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.அதுமட்டுமின்றி வாழை மரங்கள் விற்பனையும் சூடு பிடித்து உள்ளது.விழாவை ஒட்டி மலர்கள் மற்றும் வாழை கன்றுகள் விற்பனை கடைகளை சில்லறை வியாபாரிகள் சாலையின் ஓரங்கள் மற்றும் உடுமலையின் முக்கிய பகுதியில் அமைத்து உள்ளனர். அத்துடன் மலர் மாலைகள் தயாரிப்பு பணியும் தீவிரம் அடைந்து உள்ளது.மேலும் நவராத்திரி மற்றும் கொழு விழாவை முன்னிட்டு உடுமலை பகுதி கோவில்களும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழா கோலம் பூண்டுள்ளது.அத்துடன் கிராமப்புற பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் உடுமலையில் குவிந்து உள்ளதால் கடை வீதியில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. அதைத் தொடர்ந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.