இயற்கை அங்காடிக்குள் புகுந்து மூதாட்டியிடம் கத்திமுனையில் 6½ பவுன் நகை பறிப்பு வாலிபருக்கு வலைவீச்சு


இயற்கை அங்காடிக்குள் புகுந்து  மூதாட்டியிடம் கத்திமுனையில் 6½ பவுன் நகை பறிப்பு  வாலிபருக்கு வலைவீச்சு
x

சேலத்தில் இயற்கை அங்காடிக்குள் புகுந்து மூதாட்டியிடம் கத்திமுனையில் 6½ பவுன் நகை பறித்து சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம்

சேலம்,

இயற்கை அங்காடி

சேலம் மாசிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 61). இவர் அதே பகுதியில் பைபாஸ் ரோட்டில் இயற்கை அங்காடி நடத்தி வருகிறார். இந்த அங்காடிக்கு நேற்று மதியம் 30 வயதுடைய வாலிபர் ஒருவர் வந்தார். மேலும் அவர் தான் வந்த மோட்டார் சைக்கிளை அங்காடியில் இருந்து சிறிது தூரத்தில் நிறுத்திவிட்டிருந்தார்.

பின்னர் அந்த வாலிபர், லட்சுமியிடம் அயோத்தியாப்பட்டணத்துக்கு எந்த வழியாக செல்ல வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவர் வாலிபரிடம் செல்லும் வழியை கூறினார். இதையடுத்து வாலிபர் அங்காடிக்குள் நுழைந்து சில பொருட்களின் விலையை அவரிடம் கேட்டறிந்தார்.

நகை பறிப்பு

பின்னர் திடீரென அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து லட்சுமியை மிரட்டி அவர் அணிந்திருந்த 6½ பவுன் நகையை பறித்தார். அதைத்தொடர்ந்து அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story