சேலம் சீலநாயக்கன்பட்டியில் பரிகாரம் செய்வதாக கூறி மூதாட்டியிடம் நகை அபேஸ் மந்திரவாதிகளுக்கு போலீஸ் வலைவீச்சு


சேலம் சீலநாயக்கன்பட்டியில்  பரிகாரம் செய்வதாக கூறி மூதாட்டியிடம் நகை அபேஸ்  மந்திரவாதிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
x

சேலம் சீலநாயக்கன்பட்டியில் பரிகாரம் செய்வதாக கூறி மூதாட்டியிடம் நகையை அபேஸ் செய்த மந்திரவாதிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சேலம்

அன்னதானப்பட்டி:

வியாபாரி

சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் அருகே உள்ள தலைமலை நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். வியாபாரி. இவருடைய மனைவி சரஸ்வதி (வயது 56). இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் மதியம் வந்த மர்ம நபர்கள் 2 பேர், உங்கள் வீட்டில் தோஷங்கள், காத்து, கருப்பு, பில்லி, சூனியம் பிரச்சினைகள் சூழ்ந்து இருப்பதாகவும், அவற்றை நாங்கள் சிறப்பு பரிகார பூஜைகள் செய்து விரட்டுகிறோம் எனவும் கூறியுள்ளனர்.

மேலும் இதனால் பணம், வருமானம் பெருகி லாபமடைவீர்கள், உங்கள் குடும்பம் மிகுந்த சந்தோஷமாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.இதை உண்மை என்று நம்பிய சரஸ்வதி அந்த மர்ம நபர்களை வீட்டிற்குள் பூஜைகள் செய்ய கூறி உள்ளார்.

புகை போட்டனர்

தொடர்ந்து பரிகார பூஜைகள் செய்ய அந்த நபர்கள், தாங்கள் கொண்டு வந்த சொம்பில் சரஸ்வதி அணிந்திருந்த நகைகளை கழற்றி போடும் படி கூறி உள்ளனர். பின்னர் சரஸ்வதி தனது கழுத்தில் அணிந்திருந்த நகைகளை கழற்றி சொம்பில் போட்டுள்ளார். அந்த சமயம் திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மர்ம நபர்கள் வீடு முழுவதும் சாம்பிராணி புகையை போட்டனர்.

பின்னர் அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் 1½ பவுன் நகைகளுடன் மாயமாகி விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி, அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை அபேஸ் செய்த மந்திரவாதிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story