திருச்சி மாவட்டத்தில் இன்று டிரோன்கள் பறக்கத் தடை..!


திருச்சி மாவட்டத்தில் இன்று டிரோன்கள் பறக்கத் தடை..!
x

திருச்சி மாவட்டத்தில் டிரோன்கள் பறக்கத் இன்று தடைவிதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி,

திருவாரூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு விமானம் மூலம் திருச்சி வருகிறாா். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சா்கள் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னா் காா் மூலம் திருவாரூா் சென்று ஓய்வெடுக்கிறாா்.

நாளை (ஜூன் 19) திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறாா். பிறகு செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) திருவாரூரில் நடைபெறும் கலைஞா் கோட்டம் திறப்பு விழாவில் கலந்து கொள்கிறாா். இந்த விழாவில் பிகாா் முதல்-மந்திரி நிதிஷ்குமாா் கலந்து கொண்டு கலைஞா் கோட்டத்தைத் திறந்து வைக்கிறாா்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி, திருவாரூா் வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் திருவாரூரில் கலைஞா் கோட்டம் திறப்பு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

டிரோன்கள் பறக்கத் தடை விதிப்பு -:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு வந்து சாலை வழியாக திருவாரூா் மாவட்டத்துக்கு காரில் பயணம் மேற்கொள்கிறாா். இதையொட்டி, திருச்சி மாவட்டத்தில் முதல்-அமைச்சர்பயணிக்கும் வழித்தடங்களில் பாதுகாப்பு கருதி இன்று டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.


Next Story