போலி டாக்டர் கைது


போலி டாக்டர் கைது
x

போலி டாக்டர் கைது

திருப்பூர்

தாராபுரம்

திருப்பூர் மாவட்டம், குண்டடம் பகுதியில் தாராபுரம்- பொள்ளாச்சி ரோடு தாசர்பட்டி பிரிவில் ஒருவர் உரிய மருத்துவ படிப்பு படிக்காமல் கிளினிக் அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் கனகராணிக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர் அதிகாரிகளுடன், சம்பந்தப்பட்ட கிளினிக்கிற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு அப்பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் (வயது 41) என்பவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.

அவரிடம் மருத்துவம் படித்ததற்கான சான்றிதழை அதிகாரிகள் கேட்டனர். ஆனால் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை என்று தெரியவந்தது.

இதையடுத்து குண்டடம் போலீசில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் தங்கராஜை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தாராபுரம் பகுதியில் மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story