பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் சிறுதானிய உணவு திருவிழா


பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் சிறுதானிய உணவு திருவிழா
x
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் சிறு தானிய உணவு திருவிழா நடந்தது. கல்லூரி முதல்வர் அன்பரசி தலைமை தாங்கினார். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சிறு தானியங்களான கம்பு, கேழ்வரகு, சோளம், திணை, சாமை, வரகு, குதிரைவாலி ஆகியவற்றில் இனிப்பு மற்றும் கார உணவுகளை சமைத்து பார்வைக்கு வைத்தனர். இப்போட்டியின் நடுவர்களாக பேராசிரியர்கள் ரவி, அய்யப்பன், பசுபதி, ஆகியோர் இருந்து சிறந்த உணவுகளை தேர்வு செய்தனர். இதில் மாணவர்கள் கிருஷ்ணன், முனியம்மாள், நிதர்சனா ஆகியோரது உணவுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் பேராசிரியர் சுஜிதா நன்றி கூறினார்.


Next Story