அரசு பள்ளியில் உணவு திருவிழா


அரசு பள்ளியில் உணவு திருவிழா
x

திருச்சுழி அருகே அரசு பள்ளியில் உணவு திருவிழா நடைபெற்றது.

விருதுநகர்

திருச்சுழி,

திருச்சுழி அருகே காரேந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக உணவு தினத்தையொட்டி உணவு திருவிழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் அந்தோணி தலைமை தாங்கினார். விழாவில் உடலுக்கு நன்மை தரும் உணவுகள், தீமை தரும் உணவுகள் என்ற தலைப்புகளில் பல்வேறு வகையான உணவு பொருட்களை மாணவ-மாணவிகள் சமைத்து கொண்டு வந்து அனைவரின் முன்னிலையிலும் காட்சிப்படுத்தினர். இதனை ஊர்பொதுமக்கள், பெற்றோர் கண்டு ரசித்தனர். விழாவின்போது உணவை விளைவிக்கும் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மஹரிபா பானு மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர் உட்பட ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


1 More update

Next Story