அரசு பள்ளியில் உணவு திருவிழா

அரசு பள்ளியில் உணவு திருவிழா
பொள்ளாச்சி
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் ஆர்.பொன்னாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக மகளிர் தினத்தையொட்டி உணவு திருவிழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் பாரிஸ் பேகம் வரவேற்று பேசினார். 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகள் தாங்கள் கொண்டு வந்த உணவுகளை கண்காட்சியில் வைத்து விளக்கம் அளித்தனர். அதில் சிறு தானிய உணவு வகைகளான ராகி, சோளம், கம்பு போன்றவற்றை பயன்படுத்தி செய்த ராகி சேமியா, ராகி அல்வா, கூழ், சோள பனியாரம், தோசை, ராகி உப்புமா போன்ற பல்வேறு உணவுகளை காட்சிப்படுத்தினர். சிறு தானிய உணவுகளின் பயன்கள், நோய் எதிர்ப்பு சக்தி, உடல் ஆரோக்கியம் குறித்து அறிவியல் ஆசிரியர் சண்முகசுந்தரம் பேசினார். கண்காட்சியை பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர்கள் பார்வையிட்டனர். மேலும் சிறப்பு படைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.






