சேலம் சிறையில் கைதிகளுக்கு உணவு வழங்க புதிய முறை


சேலம் சிறையில் கைதிகளுக்கு உணவு வழங்க புதிய முறை
x
சேலம்

சேலம்

சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு பயோ மெட்ரிக் முறையில் உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை சிறை கண்காணிப்பாளர் வினோத் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், சேலம் சிறையில் உள்ள கைதிகளுக்கு பயோ மெட்ரிக் முறையில் உணவு பொருட்கள் வழங்கும் திட்டம் நேற்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது. அதன்படி சிறையில் உள்ள கேன்டீன் மூலம் இட்லி, ஊத்தாப்பம், உளுந்து வடை, முட்டை போண்டா, கோழிக்கறி கிரேவி உள்ளிட்ட 32 வகையான உணவுகள் வழங்கப்படும். 'ஏ' வகுப்பு கைதிகள் வாரத்திற்கு ரூ.1,000-ம், 'பி'. வகுப்பு கைதிகள் வாரத்திற்கு ரூ.750-க்கும் உணவு வாங்கி கொள்ளலாம். கைதிகள் இருக்கும் அறைகளுக்கே அவர்கள் கேட்கும் உணவுகள் கொண்டு சென்று வழங்கப்படும். இதன் மூலம் 1,065 கைதிகள் பயன் பெறுவார்கள் என்றார்.


Next Story