ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை


ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை
x

ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி 12 கிலோ கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்தனர்.

வேலூர்

நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட மாணவி இறந்ததை தொடர்ந்து அனைத்து சவர்மா ஓட்டல்களிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவின் பேரில் வேலூர் மாவட்டத்திலும் சோதனை நடத்தப்படுகிறது. அதன்படி பொய்கை மற்றும் குடியாத்தம் பகுதிகளில் நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜேஷ், சிவமணி ஆகியோர் கொண்ட குழுவினர் ஓட்டல்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஓட்டல்களில் பயன்படுத்தப்பட்ட கெட்டுப்போன 12 கிலோ சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் சமைத்து பிரிட்ஜில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 6 கிலோ உணவு வகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக 2 ஓட்டல்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 ஓட்டல்களுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், கெட்டுப்போன உணவுகள் விற்பனை செய்தால் கடையின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story