பாலக்கோட்டில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி திடீர் ஆய்வு
பாலக்கோடு
பாலக்கோடு பஸ் நிலையம், எம்.ஜி.ரோடு, பைபாஸ் ரோடு, தர்மபுரி ரோடு மற்றும் தக்காளி மார்க்கெட் பகுதிகளில் உள்ள ஓட்டல்கள் மற்றும் துரித உணவகங்களில் காரிமங்கலம், பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் திடீர் ஆய்வு செய்தார். அப்போது 2 ஓட்டல்கள், ஒரு சாலையோர துரித உணவு கடையில் இருந்து செயற்கை நிறமூட்டி பவுடர் டப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு ஓட்டலில் பலமுறை பயன்படுத்திய 3 லிட்டர் சமையல் எண்ணெய் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும் 2 கடைகளில் பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 3 கடைகளுக்கு உடனடி அபராதமாக தலா ரூ.1,000 வீதம் 3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் உபயோகப்படுத்தும் மூலப்பொருட்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், உரிய தயாரிப்பு முகவரி, உணவு பாதுகாப்பு உரிமம் எண், தயாரிப்பு தேதி, முடிவு தேதி போன்ற விவரங்கள் உள்ளனவா? என்பதை அறிந்து உபயோகப்படுத்தவும், உணவுகளை பரிமாற மற்றும் பார்சல் செய்வதற்கும், வாழை இலை பயன்படுத்தவும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ெபாருட்களை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.