ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை
வந்தவாசியில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
வந்தவாசி
வந்தவாசியில் பழைய பஸ் நிலையம், கோட்டை மூலை, காதர் ஜெண்டாத்தெரு, பஜார் வீதி, சேத்து
ப்பட்டு ரோடு, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கெட்டுப் போன இறைச்சிகள் அழிக்கப்பட்டு 3 கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கெட்டுப் போன உணவுகளை பெனாயில் ஊற்றி அழித்தனர்.
இதனைத்தொடர்ந்து கீழ்சாத்தமங்கலம் இந்திரா நகர் பகுதியில் இருந்து கடைகளில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சேகர் தலைமையில் வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்தன், நகராட்சி அதிகாரி ராமலிங்கம் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் 15 கடைகளில் ஆய்வு செய்தனர்.
இதில் கெட்டுப் போன 20 கிலோ இறைச்சி மற்றும் ஆட்டு ரத்தம் உள்ளிட்டவை அழிக்கப்பட்டன.
காதர்ஜெண்டா தெருவில் உள்ள 4 கடைகளுக்கு ரூ.8 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.