சமைத்த உணவை குளிர்சாதன பெட்டியில் வைத்து வினியோகிக்க கூடாது


சமைத்த உணவை குளிர்சாதன பெட்டியில் வைத்து வினியோகிக்க கூடாது
x
திருப்பூர்


சமைத்த உணவுப்பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து வினியோகம் செய்யக்கூடாது என்று உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை, ஓட்டல், பேக்கரி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

சமைத்த உணவுப்பொருட்கள்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின்படி திருப்பூர் மாவட்ட ஓட்டல் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்கள், அசைவ உணவக உரிமையாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமை தாங்கினார். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தங்கவேல், ரவி, பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை பேசியதாவது:- சமைத்த உணவுப்பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது. ஆட்டிறைச்சி, மீன், கோழி இறைச்சி வாங்கும்போது அதனுடன் பில் பெற்று வைத்திருக்க வேண்டும். நிறமிகள் பயன்படுத்தி உணவுப்பொருட்கள் தயாரிக்கக்கூடாது. இறைச்சி வகைகள் சமைத்த 4 முதல் 5 மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும். உணவக உரிமையாளர்கள் அரசால் வழங்கப்படும் பயிற்சி சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். பணியாளர்கள் தன் சுத்தம் பராமரிக்க வேண்டும். பயன்படுத்திய எண்ணெயை ரூகோ திட்டத்துக்கு கொடுத்து ரசீது பெற வேண்டும்.

பிளாஸ்டிக் பை

சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்க வேண்டும். பிளாஸ்டிக் பையில் உணவுப்பொருட்களை பார்சல் செய்வதை தவிர்க்க வேண்டும். சமைத்த உணவு பொருட்களை தொடர்ந்து சரியான உரிய வெப்ப நிலையில் வைத்து பராமரிக்க வேண்டும். டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு உற்பத்தியாகாமல் தண்ணீர் தேங்காமல் தண்ணீர் தொட்டிகளை முறையாக மூடி பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story