உணவு பொருள் வழங்கல் குறைதீர்க்கும் முகாம்
சீர்காழி, குத்தாலம் அருகே உணவு பொருள் வழங்கல் குறைதீர்க்கும் முகாம்
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நத்தம் கிராமத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் பொது வினியோக திட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. சீர்காழி தனி தாசில்தார் இளங்கோவன் தலைமை தாங்கினார். முகாமில் குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், உறுப்பினர் சேர்க்கை, உறுப்பினர் நீக்கம், கை பேசி எண் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. முகாமில், தனி வருவாய் ஆய்வாளர் பிரவின்குமார், வட்ட பொறியாளர், பிரபு மற்றும் அங்காடி விற்பனையாளர் அருமைச்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இதேபோல் குத்தாலம் அருகே முருகமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த முகாமுக்கு முருகமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி சங்கர் தலைமை தாங்கினார் இதில் மயிலாடுதுறை குடிமை பொருள் வழங்கல் பொதுவினியோகத் திட்ட தனி தாசில்தார் சித்ரா கலந்துகொண்டு 30-க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொண்டார். இதில் குடிமை பொருள் தனி வருவாய் ஆய்வாளர் தென்னரசு, உதவியாளர் கனிமொழி, எழுத்தர் பிரகதீஸ்வரன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.