சத்துணவு ஊழியர்கள் ஊர்வலம்


சத்துணவு ஊழியர்கள் ஊர்வலம்
x

நெல்லையில் சத்துணவு ஊழியர்கள் ஊர்வலம் நடந்தது

திருநெல்வேலி

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பாளையங்கோட்டையில் கவன ஈர்ப்பு ஊர்வலம் நடைபெற்றது. பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தையும் சத்துணவு ஊழியர்களை கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும். காலி பணியிடத்தை நிரப்ப வேண்டும். ஓய்வு பெறும் வயதை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஊர்வலம் நடைபெற்றது.

பாளையங்கோட்டை லூர்துநாதன் சிலை முன்பு இருந்து புறப்பட்டு பல்வேறு வீதிகள் வழியாக சுற்றி வந்தனர். ஊர்வலத்துக்கு மாவட்ட தலைவர் ஜெபத்தியான் என்ற ஜெயா தலைமை தாங்கினார். இதில் மாநில செயலாளர் பிச்சுமணி, பொருளாளர் ஜெசிந்தா, நிர்வாகிகள் சண்முகசுந்தரி, மகபூப் பாஷா, ஜெலட் மேரி, சுப்பிரமணியன், பிச்சையா மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story