சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று மாலை முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சரஸ்வதி தலைமை தாங்கினார். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டே நிறைவேற்றிட வேண்டும். போர்க்கால அடிப்படையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியத்தை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆளவந்தார் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் நிறைவுரையாற்றினார். முடிவில் மாவட்ட இணை பொருளாளர் மீனா நன்றி கூறினார்.


Next Story