சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பாளையங்கோட்டையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
திருநெல்வேலி
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பாளையங்கோட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தலைவர் சீதாலட்சுமி தலைமை தாங்கினார். சாமுவேல் ராஜசெல்வன், சாந்தி, காந்திமதி கனி என்ற பொன்னம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் லட்சுமி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி பேசினார்.
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடத்தை நிரப்ப வேண்டும். காலை உணவை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
Related Tags :
Next Story