சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

பாவூர்சத்திரத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக அமல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒன்றிய செயலர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சிவசுப்பிரமணியன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் கங்காதரன் மற்றும் அலிஸ் தாயம்மாள், சங்கரேஸ்வரி, கண்ணன், தங்கமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். முடிவில், ஞானமயில்ராணி நன்றி கூறினார்.

1 More update

Next Story