சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

கே.வி.குப்பத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில், கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில், பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் பணியை தமிழக அரசு, வேறுநபர்களுக்கு வழங்குவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் ஏ.உமாராணி தலைமை தாங்கினார். பொருளாளர் கே.மலர்க்கொடி, செயலாளர் ஆர்.சியாமளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.புஷ்பா வரவேற்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காலை சிற்றுண்டி வழங்கும் பணியை வேறுநபர்களுக்கு வழங்கக் கூடாது. மதிய உணவு வழங்கிவரும் சத்துணவு ஊழியர்களிடமே வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு பணிக்கொடை ரூ.5 லட்சம், சமையல் உதவியாளருக்கு ரூ.3 லட்சம், ஓய்வு ஊதியம் ரூ.6,850, வரையறுக்கப்பட்ட ஊதியம் ஆகியவை வழங்கவேண்டும். விலைவாசி உயர்விற்கு ஏற்ப மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் கி.ருக்குமணி நன்றி கூறினார்.


Next Story