சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுரை

வாடிப்பட்டி,

வாடிப்பட்டி ஒன்றியக்கிளை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பாக காலை சிற்றுண்டித்திட்டத்தினை சத்துணவு ஊழியர்களிடம் வழங்கவும், காலிப்பணியிடங்களை உடனடியாக நியமனம் செய்யகோரியும் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் சூசைநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் பிச்சையம்மாள் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில், ஓய்வூதியர் சங்க வட்ட கிளை செயலாளர் வேல்மயில், நிர்வாகி லெட்சுமி, ஒன்றிய துணைசெயலாளர் பாலாமணி உள்பட பலர் பேசினர். சங்க மாநில செயலாளர் பாண்டிச்செல்வி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். முடிவில் பொருளாளர் கல்யாணி நன்றி கூறினார்.


Next Story