ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரத்தில் சத்துணவு ஊழியரகள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரத்தில் யூனியன் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க தென்காசி மாவட்ட பொருளாளர் சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம் வரவேற்றார். தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயலட்சுமி, மாரியப்பன், தமிழ்நாடு அரசு அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ஜான்சன்துரை, தென்காசி மாவட்ட இணை செயலாளர் சிவராமகிருஷ்ணன், அங்கன்வாடி ஊழியர் சங்க கீழப்பாவூர் ஒன்றியம் கிருஷ்ணவேணி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய துணைத் தலைவர் தங்கமணி, அங்கன்வாடி ஊழியர் சங்கம் சரஸ்வதி ஆகியோர் பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கெங்காதரன் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய துணை தலைவர் சக்திமாரி நன்றி கூறினார்.

1 More update

Next Story