சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

ஆற்காட்டில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றிய, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், தமிழக முதல்-அமைச்சரின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும், காலமுறை ஊதியம், குடும்ப நல ஓய்வூதியம், பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க கோரியும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரியும், மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஆற்காடு ஒன்றிய தலைவர் பிரேமா தலைமை தாங்கினார். விநாயகம், ஏழுமலை, காந்தி, ஜெயலட்சுமி, லட்சுமி, கல்பனா உள்பட பலர் முன்னிலை வகித்தனர். இணைச் செயலாளர் உமா மகேஸ்வரி வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் கீதா கோரிக்கைகள் குறித்துபேசினார். ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சேகர், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். முடிவில் ஒன்றிய பொருளாளர் நிர்மலா நன்றி கூறினார்.


Next Story