சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்சி

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சத்தியவாணி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சேட்டுமுகமது முன்னிலை வகித்தார். இதில் மாநில துணைத்தலைவர் பெரியசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பால்பாண்டி, டிராம் மாநில தலைவர் சுரேஷ்பிரபு மற்றும் பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். முடிவில் மாவட்ட செயலாளர் பழனிசாமி நன்றி கூறினார். தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல் சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கி ஓய்வூதியம், பணிக்கொடை போன்றவற்றை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தின்போது கோஷங்களை எழுப்பினர்.


Next Story