சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 May 2023 6:45 PM GMT (Updated: 3 May 2023 6:45 PM GMT)

கடையத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி

கடையம்:

கடையம் யூனியனில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி துறை மாவட்ட செயலாளர் ராஜசேகர், ஊரக வளர்ச்சி துறையை சேர்ந்த கணேசன், பூத்துரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஒன்றிய செயலாளர் மூவாயிரம் விளக்க உரை ஆற்றினார். மாநில செயலாளர் பிச்சுமணி நிறைவுறை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்றிட வேண்டும். வேறு யாருக்கும் வழங்க கூடாது என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டனர். இசக்கியம்மாள் நன்றி கூறினார்.


Next Story