உசிலம்பட்டி, அலங்காநல்லூரில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


உசிலம்பட்டி, அலங்காநல்லூரில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

உசிலம்பட்டி, அலங்காநல்லூரில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை

உசிலம்பட்டி

உசிலம்பட்டி, அலங்காநல்லூரில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலையில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டத்தை மகளிர் குழுவினர் மூலம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், சத்துணவு ஊழியர்களை கொண்டு காலை சிற்றுண்டியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சத்துணவு ஊழியர்கள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவாக சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை மகளிர் குழுவினர் மூலம் வழங்கப்படுவதை தவிர்த்து சத்துணவு ஊழியர்களைக் கொண்டு காலை சிற்றுண்டி வழங்க வழிவகை செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, சத்துணவு ஊழியர்களை கொண்டு காலை சிற்றுண்டி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

அலங்காநல்லூர்

அலங்காநல்லூர் யூனியன் அலுவலகம் முன்பாக சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை தலைவர்கள் காயாம்பு, சந்திரா, செயற்குழு உறுப்பினர் அய்யம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய தொகையை வழங்க வேண்டும். அலங்காநல்லூர் ஒன்றியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


Next Story