மெழுகுவர்த்தி ஏந்தி சத்துணவு ஊழியர்கள் போராட்டம்


மெழுகுவர்த்தி ஏந்தி சத்துணவு ஊழியர்கள் போராட்டம்
x

மெழுகுவர்த்தி ஏந்தி சத்துணவு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்

மதுரை


தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள கோரிக்கை மனுவில், 30 ஆண்டுகள் தொடர்ந்து சத்துணவு பணியாளர்களாக பணிபுரிந்து ஓய்வு பெறும் சத்துணவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்கிட வேண்டும். அதை டி.ஏ. உடன் குடும்ப ஓய்வூதியமாக அரசு உத்தரவு வழங்கிட வேண்டும். கிராம உதவியாளர்கள் 10 ஆண்டுகள் பணி முடிந்தவுடன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்களுக்கு கிராம நிர்வாக அலுவலராக பதவி உயர்வு வழங்கியது போல், சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஆண், பெண் என்ற பேதம் பார்க்காமல் பதிவுறு எழுத்தராக பதவி உயர்வு வழங்கிட வேண்டும். 10, 20, 30 ஆண்டுகள் பணி முடித்திட்ட சத்துணவு அமைப்பாளர்களுக்கு, முறையான தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியமாக 2 ஆண்டுகள் ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும். சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் காலி பணியிடங்களை 6 மாத காலத்திற்குள் நிரப்ப வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி சத்துணவு பணியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.


Next Story