ஓட்டப்பிடாரத்தில்சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ஓட்டப்பிடாரத்தில்சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Aug 2023 12:15 AM IST (Updated: 19 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரத்தில்சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகம் முன்பு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள காலை உணவு திட்டத்தை சந்துணவு ஊழியரிடம் ஒப்படைக்கவேண்டும் எனற கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க வட்டாரத் தலைவர் ஞானமணி தலைமை தாங்கினார். கோரிக்கையை வலியுறுத்தி வட்டார செயலாளர் அகிலா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வட்டார சேயலாளர் திருமலை ஆகியோர் பேசினார். வட்டார துணை தலைவர் ஜெயலட்சுமி நன்றி கூறினார்.


Next Story