மெழுகுவர்த்தி ஏந்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


மெழுகுவர்த்தி ஏந்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 April 2023 12:30 AM IST (Updated: 18 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் மெழுகுவர்த்தி ஏந்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ராமு தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் துரைராஜ், சரஸ்வதி, சுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் மணிக்காளை, அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் சரவணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் ஜெசி பங்கேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தின்போது, காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்புவதோடு, பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் சத்துணவு ஊழியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் ராசாத்தி நன்றி கூறினார்.


Next Story