பெற்றோருக்கு பாத பூஜை செய்த மாணவிகள்


பெற்றோருக்கு பாத பூஜை செய்த மாணவிகள்
x
தினத்தந்தி 23 Feb 2023 12:15 AM IST (Updated: 23 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி அருகே உள்ள கல்லூரியில் மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடி அருகே அமராவதி புதூரில் உள்ள ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில் 3-ம் ஆண்டு மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி சாரதேஸ்வரி ஆசிரமம் யோகேஸ்வரி ஸ்ரீ மீராபுரி மாதாஜி தலைமை தாங்கி மாணவிகளுக்கு ஆன்மிகம் பற்றிய கருத்துகளை எடுத்துரைத்து பூஜையை நடத்தி ஆசி வழங்கினார். அருள் சகோதரிகள் யத்தீஸ்வரி சாரதேஸ்வரி பிரியா அம்பா மற்றும் யத்தியஸ்வரி ராமகிருஷ்ண பிரியா அம்பா ஆகியோர் பாத பூஜைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்தனர். முன்னதாக கல்லூரி முதல்வர் சிவசங்கரி ரம்யா வரவேற்றார்.கல்லூரி இயக்குனர் மீனலோசனி நன்றி கூறினார்.. பேராசிரியர்கள், 150-க்கும் மேற்பட்ட மாணவிகள், அவர்களது பெற்றோர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story