மாணவிகளுக்கான கால்பந்து, கூடைப்பந்து போட்டி
மாணவிகளுக்கான கால்பந்து, கூடைப்பந்து போட்டி நடந்தது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் வருவாய் மாவட்ட அளவிலான 19, 17, 14 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான கால்பந்து, கூடைப்பந்து போட்டிகள் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் இளங்கோவன் வாழ்த்தி பேசினார். இதில் கால்பந்து போட்டியில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் வரதராஜன்பேட்டை அலங்கார அன்னை மேல்நிலைப்பள்ளி முதலிடமும், திருமழபாடி அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடமும், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இலையூர் வாரியங்காவல் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், அரியலூர் நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடமும், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் திருமழபாடி அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், இலையூர் வாரியங்காவல் அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடமும் பிடித்தன. கூடைப்பந்து போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் அரியலூர் ஆர்.சி. நிர்மலா காந்தி நடுநிலைப்பள்ளி முதலிடமும், ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடமும், 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், அரியலூர் நிர்மலா மெட்ரிக் பள்ளி இரண்டாம் இடமும் பிடித்தன. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.