20 நாட்களுக்கு தக்கோலம் கல்லாற்று குடிநீர் மட்டுமே கிடைக்கும்
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் குழாய் பராமரிப்பு பணி காரணமாக 20 நாட்களுக்கு தக்கோலம் கல்லாற்று குடிநீர் மட்டுமே கிடைக்கும் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இந்த பகுதி மக்களுக்கு தக்கோலம் கல்லாறு மற்றும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் சுழற்சி முறையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் பிரதான குழாய்களில் ஏற்பட்டுள்ள சேதங்களை சரி செய்து பராமரிப்பு பணி 20 நாட்களுக்கு நடை பெறுகிறது.
எனவே தக்கோலம் கல்லாற்று நீட்மட்டுமே 20 நாட்களுக்கு வினியோகம் செய்யப்படும். இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குடிநீரை பயன்படுத்தி துணி துவைத்தல், வீடு சுத்தம் செய்தல் போன்ற செயல்களை செய்யக் கூடாது. மேலும், மின்மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சக்கூடாது. மின் மோட்டாரை பயன்படுத்துவது தெரிய வந்தால் அபராதம் விதிக்கப்பட்டு, மோட்டார் பறிமுதல் செய்யப்படும் என நகராட்சி ஆணையர் லதா தெரிவித்தார்.