ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு மானியத்தில் மின்மோட்டாருடன் கூடிய நுண்ணீர் பாசன வசதியுடன் கிணறு அமைக்கும் திட்டம்


ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு  மானியத்தில் மின்மோட்டாருடன் கூடிய நுண்ணீர் பாசன வசதியுடன் கிணறு அமைக்கும் திட்டம்
x

ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு மானியத்தில் மின்மோட்டாருடன் கூடிய நுண்ணீர் பாசன வசதியுடன் கிணறு அமைக்கும் திட்டம் அரியலூர் மாவட்டத்தில் 38 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்படுகிறது.

அரியலூர்

நுண்ணீர் பாசன வசதி

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைத்து மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைத்து தரப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், திருமானூர், ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம், செந்துறை ஆகிய 6 தாலுகாவில் உள்ள நிலத்தடி நீர் பாதுகாப்பாக உள்ள 38 கிராம பஞ்சாயத்துகளில் ஆதிதிராவிட பழங்குடியின சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அரியலூர் தாலுகாவில் வாலாஜாநகரம், ரெட்டிபாளையம், கடுகூர், ஆலந்துறையார் கட்டளை, எருத்துக்காரன்பட்டி, காவனூர், நாகமங்கலம், புங்கங்குழி.

38 கிராம பஞ்சாயத்துகள்

திருமானூர் தாலுகாவில் அழகியமணவாளம், ஏலக்குறிச்சி, கீழகாவட்டான்குறிச்சி, சின்னபட்டக்காடு, கண்டிராதீர்த்தம், பூண்டி. ஜெயங்கொண்டம் தாலுகாவில் தலுதாய்மேடு, குண்டவேலி, முத்துசேர்வமடம், கங்கைகொண்டசோழபுரம், கட்டாகரம், தத்தனூர், எரவான்குடி. செந்துறை தாலுகாவில் மணப்பத்தூர், தளவாய், ஆலத்தியூர், அசுவீரன்குடிகாடு, மணக்குடையான்.

தா.பழூர் தாலுகாவில் அம்பாபூர், சிந்தாமணி, தா.பழூர், வேம்புகுடி, பருக்கல். ஆண்டிமடம் தாலுகாவில் கூவத்தூர், அழகாபுரம், ஆண்டிமடம், பெரியகிருஷ்ணாபுரம், விளந்தை, இலையூர், சிலம்பூர் ஆகிய 38 பாதுகாப்பான கிராம பஞ்சாயத்துகளில் உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் அருகாமையில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

நிதியுதவி

அரசு வெளியிட்ட ஆணையின்படி 90 மீட்டர் ஆழம் உள்ள குழாய் கிணறு அமைப்பதற்கும், 100 மீட்டர் ஆழம் உள்ள ஆழ்துளை கிணறு அமைப்பதற்கும் அதிகபட்சமாக ரூ.3 லட்சமும், மின்சார சக்தி மூலம் இயங்கக்கூடிய 5 குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகள் அமைப்பதற்கு ரூ.75 ஆயிரமும், நீர் வினியோக குழாய்கள் அமைப்பதற்கு ரூ.20 ஆயிரமும் உச்சவரம்பு தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்சாரசக்தி மூலம் இயங்கக்கூடிய இடங்களுக்கு மின்சார இணைப்புக்கான கட்டமைப்புகள் அமைத்திட ரூ.2½ லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.

அரசினால் நிர்ணயிக்கப்பட்ட ஆழத்திற்கும் அதிகமாக கிணறு அமைக்க வேண்டும் என்றாலோ அல்லது கூடுதல் குதிரைத்திறன் கொண்ட பம்புசெட்டுகள் நிறுவ வேண்டும் என்றால் அதற்கான கூடுதல் செலவினை விவசாயிகளே ஏற்றுக் கொள்ளவேண்டும்.

உதவி செயற்பொறியாளர் அலுவலகம்

மேலும் விவரங்களுக்கு அரியலூர்-ஜெயங்கொண்டம் ரோட்டில் அரசு பல்துறை அலுவலக வளாகத்தில் அறை எண் 26-ல் உள்ள வேளாண்மை பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 9443399525 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். உடையார்பாளையம்-பரணம் ரோடு வெள்ளை பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள வேளாண்மை பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 9442112969 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story