ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சி


ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சி
x
தினத்தந்தி 2 Aug 2023 12:15 AM IST (Updated: 2 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு தகவல் தொழில் நுட்ப பயிற்சி வழங்கப்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு தகவல் தொழில் நுட்ப பயிற்சி வழங்கப்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்ப பயிற்சி

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழக (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது.

அதன் அடிப்படையில் 12-ம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு டி.சி.எஸ். ஐ.ஓ.என். நிறுவனத்துடன் இணைந்து தகவல் தொழில் நுட்பம் சம்பந்தப்பட்ட பயிற்சியான டேட்டா அனலைடிக்ஸ் அன்ட் ரிப்போர்ட்டிங், அப்ளைடு குளோட் கம்ப்யூட்டிங், பிராக்டிகல் அப்ரோச் டு சைபர் செக்யூரிட்டி, அனிமேஷன் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை இணையதளம் வழியாக பயிற்றுவித்து முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட உள்ளது.

விண்ணப்பிக்கலாம்

தகவல் தொழில் நுட்பம் சம்பந்தப்பட்ட பயிற்சியினை பெற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் அல்லது கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வரும் 18 முதல் 28 வயது நிரம்பிய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அனிமேஷன் சம்பந்தப்பட்ட பயிற்சி பெற 12-ம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்ற 18 முதல் 28 வயது நிரம்பிய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் மேற்கண்ட நிறுவனத்தால் நடத்தப்படும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வு ஆங்கில வழியில் அந்த நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேர்வு மையங்களான சென்னை, கோவை, மதுரை, சேலம் மற்றும் நெல்லை ஆகிய தேர்வு மையங்களில் நடைபெறும்.

இதில் தேர்ச்சி பெறும் பட்சத்தில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் அனிமேஷன் சம்பந்தப்பட்ட பயிற்சியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் சேர்ந்து பயிற்சி பெறலாம். இப்பயிற்சியினை பெற WWW.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சிக்கான கட்டணத்தினை தாட்கோ மூலம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story