நிலத்தகராறில் அண்ணன்-தம்பிக்கு சரமாரி கத்திக்குத்து
நிலத்தகராறில் ஏற்பட்ட பிரச்சினையில் அண்ணன்-தம்பி சரமாரியாக கத்தியால குத்தபங்பட்டனர். இது தொடர்பாக தப்பி ஓடிய மற்றொரு தம்பியை போலீசார் கைது செய்தனர்.
நிலத்தகராறில் ஏற்பட்ட பிரச்சினையில் அண்ணன்-தம்பி சரமாரியாக கத்தியால குத்தபங்பட்டனர். இது தொடர்பாக தப்பி ஓடிய மற்றொரு தம்பியை போலீசார் கைது செய்தனர்.
நிலத்தகராறு
ஒடுகத்தூரை அடுத்த மராட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் நாயுடு. இவரது மகன்கள் தட்சணாமூர்த்தி (வயது 49), சுந்தரமூர்த்தி, சரவணன் (41). அண்ணன்- தம்பிகளான இவர்களுக்கு சொந்தமாக அந்தப் பகுதியில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை பாகப்பிரிவினை செய்வதில் இவர்கள் 3 பேருக்கும் இடையே பிரச்சினை வந்ததால் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.அதன்பின் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் வழக்கை வாபஸ் பெறுவதாக தட்சணாமூர்த்தி தெரிவித்தார். அதன்படி வழக்கை வாபஸ் பெற்றார்.இந்த நிலையில் தட்சணாமூர்த்தி நேற்று காலை அவருக்குரிய இடத்தில் டிராக்டர் மூலம் உழவு செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த தட்சணாமூர்த்தியின் கடைசி தம்பி சரவணன், கோர்ட்டில் வழக்கு இருக்கும்போது ஏன் ஏர் ஓட்டுகிறாய் என்று கேட்டுள்ளார்.
கத்திக்குத்து
இதனால் தட்சணாமூர்த்திக்கும் சரவணனுக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சரவணன் நிலத்தில் இருந்த கல்லால் தட்சணாமூர்த்தியை தாக்கியுள்ளார். இதைப்பார்த்த அவரது தம்பி சுந்தரமூர்த்தி, அண்ணனை இப்படி கல்லால் அடித்து இருக்கின்றாயே என்று கேட்டுள்ளார். அதற்கு சரவணன் ஒன்று சேர்ந்து என் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கிறாய் என்று கூறி மறைத்து வைத்திருந்த கத்தியால் சுந்தரமூர்த்தியை சரமாரியாக குத்தி உள்ளார். படுகாயம் அடைந்த நிலையிலும் தடுக்க வந்த தட்சணாமூர்த்தியையும் கத்தியால் குத்திய சரவணன் தப்பி சென்று விட்டார்.
நிலைகுலைந்து மயங்கி விழுந்த தட்சணாமூர்த்தி மற்றும் சுந்தரமூர்த்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தகவல் அறிந்த வேப்பங்குப்பம் போலீஸ் பயிற்சி இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தப்பிச் சென்ற சரவணனை போலீசார் கைது செய்தனர்.