திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல்


திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல்
x

ராணிப்பேட்டை மாவட்ட திட்டமிடும்குழு உறுப்பினர் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வளர்மதி வெளியிட்டர்.

ராணிப்பேட்டை

வரைவு வாக்காளர் பட்டியல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில், 2023-ம் ஆண்டு நடைபெற உள்ள மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கு, மாவட்ட ஊராட்சி, பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்ட வரைவு வாக்காளர் பட்டியலை வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

முதல் பிரதியை ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் குமார் பெற்றுக் கொண்டார். இந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்றைய நிலையிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்களின் பட்டியலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

300 பேர்

இந்த மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் 13 பேர், நகராட்சி கவுன்சிலர்கள் 168 பேர், பேரூராட்சி கவுன்சிலர்கள் 119 பேர் என மொத்தம் 300 பேர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலின் இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 4-ந் தேதி வெளியிடப்படும். இக்குழுவில் 12 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் மாவட்ட திட்டமிடும் குழுவின் தலைவராக செயல்படுவார் என கலெக்டர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஆனந்த், நகராட்சி ஆணையர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story