சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்களுக்குதிறன் மேம்பாட்டு பயிற்சி


சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்களுக்குதிறன் மேம்பாட்டு பயிற்சி
x
தினத்தந்தி 20 Sept 2023 12:15 AM IST (Updated: 20 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்ட சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் தேசிய பசுமைப்படையின் சார்பில், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முத்துத்தேவன்பட்டியில் நடந்தது.

தேனி

தேனி மாவட்ட சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் தேசிய பசுமைப்படையின் சார்பில், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முத்துத்தேவன்பட்டியில் உள்ள தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் சங்குமுத்தையா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

மாசுகட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் காயத்ரி, மாவட்ட பசுமைத்தூதர் பிரியங்கா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். 2023-24-ம் ஆண்டின் செயல்திட்டம் குறித்து மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கண்ணன் விளக்கம் அளித்தார். முடிவில் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் நன்றி கூறினார். இதில், 150-க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டனர். பயிற்சியின் போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் கலந்துகொண்டவர்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.


Related Tags :
Next Story