முன்னாள் படை வீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை


முன்னாள் படை வீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை
x

தொழிற்கல்வி பயிலும் முன்னாள் படை வீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

திருவாரூர்

திருவாரூர்;

தொழிற்கல்வி பயிலும் முன்னாள் படை வீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கல்வி உவித்தொகை

2023-24 கல்வியாண்டில் முதலாம் ஆண்டு தொழிற்கல்வி பயிலும் முன்னாள் படை வீரர்களின் வாரிசுகளுக்கு பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியுள்ள முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்களின் வாரிசுதாரர்கள் 'www.ksb.gov.in' என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விளக்கம் மற்றும் விவரக்குறிப்பின்படி, இணைய தளம் வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்

பிரதமர் கல்வி உதவித்தொகை முன்னாள் படை வீரர்களின் பெண் வாரிசுகளுக்கு மாதந்தோறும் ரூ.3ஆயிரம் (ஆண்டுக்கு ரூ.36ஆயிரம்) மற்றும் ஆண் வாரிசுகளுக்கு மாதந்தோறும் ரூ.2ஆயிரத்து500 (ஆண்டுக்கு ரூ.30ஆயிரம்) வழங்கப்படுகிறது. இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கு தேவைப்படும் படை பணிச்சான்று சுருக்கம் பெற முன்னாள் படைவீரரின் அசல் படைவிலகல் சான்று, ஓய்வூதிய ஆணை நகல், அடையாள அட்டை மற்றும் வாரிசுகளின் கல்விச்சான்றுடன் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடத்தில் இயங்கிவரும் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுக வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் அடுத்த மாதம் (நவம்பர்) 30-ந் தேதியாகும். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடைய முன்னாள் படை வீரர்கள் பிரதமர் கல்வி உதவி தொகை பெற இணையவழியாக விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story