தோட்டக்கலை விவசாயிகளுக்குவெளிநாட்டில் பயிற்சி-அதிகாரிகள் தகவல்


தோட்டக்கலை விவசாயிகளுக்குவெளிநாட்டில் பயிற்சி-அதிகாரிகள் தகவல்
x

உயர் தொழில்நுட்ப வேளாண்மையில் ஈடுபடும் தோட்டக்கலை விவசாயிகளுக்கு வெளிநாட்டில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்

உயர் தொழில்நுட்ப வேளாண்மையில் ஈடுபடும் தோட்டக்கலை விவசாயிகளுக்கு வெளிநாட்டில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெளிநாட்டில் பயிற்சி

வேலூர் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் உயர் தொழில்நுட்ப வேளாண்மையில் ஈடுபடும் தோட்டக்கலை விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக உலகத்தரம் வாய்ந்த உயர் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

உயர் தொழில்நுட்ப தோட்டக்கலையில் முன்னோடி நாடுகளாக விளங்கும் இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு தோட்டக்கலை விவசாயிகளை அழைத்து சென்று உயர் தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயிகளின் திறனை அதிகரிக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

உயர் தொழில்நுட்பங்கள்

நுண்ணீர் பாசனம், நிலப்போர்வை, மதிப்புக்கூட்டுதல், பசுமைகுடில், நிழல் வலைக்குடில், அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பங்கள், மண்ணில்லா விவசாயம், செங்குத்து தோட்டக்கலை போன்ற உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் விவசாயிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

உயர் தொழில்நுட்ப வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு விருப்பம் இருந்தால் ஆதார்எண், முகவரி, பாஸ்போர்டு, விசா, விவசாயிகள் பின்பற்றும் தோட்டக்கலை தொழில்நுட்பங்கள், விவசாய நிலம் சொந்த நிலமாகவோ அல்லது குத்தகை நிலமாகவோ இருக்கலாம். இந்த ஆவணங்களுடன் அருகே உள்ள வட்டார தோட்டக்கலை உதவி அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அல்லது tnhortnet என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த தகவலை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story