காமராஜர் சிலைக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மரியாதை
களக்காட்டில் காமராஜர் சிலைக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இட்டமொழி:
களக்காட்டில் காமராஜர் சிலைக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
காமராஜர் பிறந்த நாள்
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., நேற்று பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைந்துள்ள மகாராஜநகரில் கட்சி கொடியேற்றி காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நெல்லை சந்திப்பில் உள்ள காமராஜர் சிலை, மூலைக்கரைப்பட்டி அருகே சுருளை கிராமத்தில் உள்ள காமராஜர் சிலை, களக்காடு, பரப்பாடி, விஜய அச்சம்பாடு ஆகிய ஊர்களில் உள்ள காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நாங்குநேரியில் உள்ள ஓசன்னா அன்பு இல்லத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் புதிய ஆடைகள் வழங்கினார். பரப்பாடியில் பொதுமக்களுக்கு இலவச சேலைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தம்பிதோப்பு, ராஜபுதூர், பாப்பான்குளம், ஆனிகுளம் மன்னார்புரம் ஜங்ஷன் ஆகிய ஊர்களில் காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். பின்னர் இட்டமொழியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., அங்கு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள், பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கினார். மாவடியில் காமராஜர் பிறந்த நாள் சிறப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்த பொதுக்கூட்டத்தில் காமராஜரின் பேத்தி வி.எஸ்.கமலிகா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் த.காமராஜ், முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் டபிள்யு. ராஜசிங், மாநில ஓ.பி.சி.பொதுச் செயலாளர் ஜெஸ்கர்ராஜா, மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் இட்டமொழி நம்பித்துரை, மாவட்ட துணைத்தலைவர்கள் செல்லபாண்டியன், சந்திரசேகர், முன்னாள் கவுன்சிலர் பத்மசிங் செல்வமீரான், மகளிர் காங்கிரஸ் குளோரிந்தாள், வட்டார தலைவர்கள் ராமஜெயம், நளன், ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க.-தி.மு.க.
பணகுடி பஸ் நிலையம் முன்னாள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜர் படத்துக்கு சபாநாயகர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பணகுடி பேரூராட்சி தலைவி தனலெட்சுமி, பணகுடி நகர தி.மு.க. செயலாளர் தமிழ்வாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
களக்காட்டில் உள்ள காமராஜர் சிலைக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் நாராயண பெருமாள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் வள்ளியூர் யூனியன் சேர்மனும், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளருமான சேவியர் செல்வராஜா வள்ளியூர் ஒன்றியம் ஊரல்வாய்மொழி, ஆவரைகுளம், பணகுடி ஆகிய ஊர்களில் காமராஜர் திருவுருவ படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் கொசிஜின், மாணவரணி லெட்சுமணன், துணை செயலாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் தி.மு.க. தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
களக்காட்டில் தி.மு.க. சார்பில் காமராஜர் சிலைக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தெற்கு ஒன்றிய செயலாளரும், நகராட்சி துணை தலைவருமான பி.சி.ராஜன் தலைமையில், அவைதலைவர் தங்கபாண்டி, ஒன்றிய துணை செயலாளர்கள் கட்டளை கர்ணன், செல்வம், பொருளாளர் திருமலைநம்பி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முகைதீன், நகராட்சி கவுன்சிலர் ஜின்னா, நகர இளைஞரணி அமைப்பாளர் ஏசுதாஸ், மாவட்ட பிரதிநிதிகள் கோபால் பாண்டியன், அருணாசலம், ஜாண்பால் மற்றும் அருணாசலம் என்ற மைனர், முருகேசன், கல்யாணசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் செல்வராஜ், ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளரும் முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான ராஜேந்திரன், நகராட்சி கவுன்சிலர்கள் இசக்கியம்மாள், இஸ்ரவேல் உள்பட பலர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
நாடார் மகாஜன சங்கம்
நாடார் மகாஜன சங்கம் சார்பில் நெல்லை சந்திப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு சங்க மாவட்ட தலைவர் அசோகன் நாடார் தலைமை தாங்கினார். நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சார்லஸ் பிரேம்குமார் நாடார் முன்னிலை வகித்தார். தொடர்ந்து நெல்லை சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் மாநகர துணை தலைவர்கள் பாக்கியராஜ் நாடார், மனோகர் நாடார், மாநகர கமிட்டியாளர் எட்வர்ட் ராஜா, ராஜேஸ், மாவட்ட இளைஞரணி தலைவர் அருள்ராஜ், துணை தலைவர்கள் பிராங்கிளின், நெல்லை ஸ்கேன் டாக்டர் கிங்ஸ்டன் விஜய் ஆசிர், மேலக்கரை சீனிவாசகம், சைமன், கென்னடி, கார்த்திக் உள்பட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
கூந்தன்குளம்-இட்டமொழி
நாங்குநேரி யூனியன் கூந்தன்குளம் அரசு நடுநிலைப்பள்ளி, டி.டி.டி.ஏ. தொடக்கப்பள்ளி, மாங்குளம் டி.டி.டி.ஏ தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மதிய உணவு வழங்கப்பட்டது.
நாங்குநேரி கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ரவீந்திரன், காங்கிரஸ் நிர்வாகி லெனின் பாரதி, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி நிக்சன், கூந்தன்குளம் பஞ்சாயத்து தலைவர் சுதா வேல்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இட்டமொழியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மாவட்ட துணைத் தலைவர் தளவாய், ஒன்றிய தலைவர் கண்ணன், துணைத்தலைவர் பட்டுராஜ், பிரசார பிரிவு செயலாளர் ரவிக்குமார், கட்சி நிர்வாகிகள் வெற்றிவேல், பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இட்டமொழி தாயம்மாள் தாசன் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை ஜெபா தலைமையில் காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக நடைபெற்றது. குழந்தைகள் பாடல், பேச்சு மற்றும் நடனம் ஆடினார்கள். வித்யாரம்பம் டிரஸ்ட் மாநில ஒருங்கிணைப்பாளர் வே.பிரபாவதி பேசினார். குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பணகுடி-கூடங்குளம்
பணகுடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பஸ் நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜர் படத்திற்கு நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிஸ் கட்சி தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார், மாநில காங்கிரஸ் செயலாளர் ஜோதி உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பணகுடி நகர காங்கிரஸ் தலைவர் எட்வின், மாவட்ட காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் மணி, பணகுடி பேரூராட்சி கவுன்சிலர் பூங்கோதை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூடங்குளம் அணுமின் திட்ட மெயின் கேட் முன்பு அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி தலைமையில் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய அவைத் தலைவர் ராமையா, மாவட்ட தி.மு.க. பிரதிநிதி சமூகை முரளி, கோவிந்தன், சந்திரசேகர், மாவட்ட கவுன்சிலர் ஜான்ஸ் ரூபா கிங்ஸ்டன், ராதாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பொன்மீனாட்சி அரவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வள்ளியூர்
வள்ளியூரில் பழைய பஸ் நிலையம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த காமராஜர் உருவச்சிலைக்கு தி.மு.க. சார்பில் ஞானதிரவியம் எம்.பி. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் வள்ளியூர் பேரூராட்சி தலைவர் ராதா ராதாகிருஷ்ணன், துணை தலைவர் கண்ணன், மந்திரம், தில்லைராஜா மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
தெற்கு கள்ளிகுளம் கிராம காங்கிரஸ் கமிட்டி சார்பில் அங்குள்ள பஸ்நிலையம் அருகில் நடந்த விழாவுக்கு அதன் தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் வில்பிரட் சிங், செயலாளர் ரோக்சன், துணை செயலாளர் அந்தோணி மிக்கேல், பொருளாளர் ஜோனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராதாபுரம் வட்டார வர்த்தக காங்கிரஸ் தலைவர் பனிமய சேவியர், கட்சி கொடியேற்றி காமராஜர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். முன்னாள் செயலாளர் எட்வின் இனிப்பு வழங்கினார். இதில் ஜோதிராஜ், எட்வின், துரை, கென்னடி, சேசுராஜன், கெலிக்காராஜ், சேகர், ஜோசப், தாசன், பிரான்சிஸ், ராஜன், மிக்கேல், ஜவகர்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.