மதுரை கூட்டுக்குடிநீர் திட்ட பணிக்காகதோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்து அபாயம்


மதுரை கூட்டுக்குடிநீர் திட்ட பணிக்காகதோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்து அபாயம்
x
தினத்தந்தி 24 April 2023 6:45 PM GMT (Updated: 24 April 2023 6:45 PM GMT)

கூடலூர் அருகே மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

தேனி

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லும், புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டது. இதையடுத்து கூடலூர் குருவனூற்றுப்பாலம் அருகே வண்ணான்துறை பகுதியில் தடுப்பணை கட்டி அங்கிருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் கூடலூர்- கம்பம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் குடிநீர் குழாய் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கூடலூரை அடுத்த மந்தை வாய்க்கால் பாலம் அருகே புதிய குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உயிர்பலி ஏற்படுவதற்கு முன்பு தோண்டப்பட்ட பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.


Related Tags :
Next Story