செலவுக்கு பணம் கொடுக்காததால்நண்பனை தாக்கிய வாலிபர் கைது


செலவுக்கு பணம் கொடுக்காததால்நண்பனை தாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 11 Sept 2023 12:15 AM IST (Updated: 11 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனி அல்லிநகரத்தில் செலவுக்கு பணம் கொடுக்காததால் நண்பனை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

தேனி அல்லிநகரம் பாண்டியன் நகரை சேர்ந்தவர் நாகராஜ் என்ற நரசிங்கப்பெருமாள் (வயது 28). அல்லிநகரம் அம்பேத்கர் தெற்கு தெருவை சேர்ந்தவர் அரசாங்கம் (29). இவர்கள் இருவரும் நண்பர்கள். கடந்த 1 மாதத்துக்கு முன்பு அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு இருவரும் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று தேனி பழைய பஸ் நிலையம் அருகில் நாகராஜ் நின்று கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த அரசாங்கம், நாகராஜிடம் செலவுக்கு பணம் கேட்டதாக தெரிகிறது. அவர் பணம் இல்லை என்று சொன்னதால் அவரை அரசாங்கம் கையால் தாக்கி கீழே தள்ளிவிட்டார். அப்போது கீழே கிடந்த பீர்பாட்டில் குத்தியதில் நாகராஜ் காயம் அடைந்தார். இதுகுறித்து அவர் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து அரசாங்கத்தை கைது செய்தனர்.


Related Tags :
Next Story