ரெயில்வே சுரங்கப்பாதை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கிடந்த கைத்துப்பாக்கி


ரெயில்வே சுரங்கப்பாதை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கிடந்த கைத்துப்பாக்கி
x
தினத்தந்தி 25 July 2023 6:45 PM GMT (Updated: 25 July 2023 6:46 PM GMT)

போடி அருகே ரெயில்வே சுரங்கப்பாதை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கைத்துப்பாக்கி கிடந்தது.

தேனி

போடி சுப்புராஜ் நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் தெய்வம் (வயது 37). இவரது வீட்டின் அருகே ரெயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு தெய்வம் அந்த வழியாக நடந்து சென்றார். அப்போது அந்த பள்ளத்தில் கைத்துப்பாக்கி ஒன்று துருப்பிடித்த நிலையில் கிடந்தது. அதை எடுத்த தெய்வம் நேற்று காலை போடி நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணை நடத்தியதில், அது சுமார் ¾ அடி நீளமுள்ள ஆங்கிலேயர் கால கைத்துப்பாக்கி என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story